தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Articles by "Computer tips and software"
3d game Airtel tips Ajith tips All in one App Android Application Android Application - WhatsApp Tricks Android hard reset tips Android tips Android tips and software Audio editing software AVG Antivirus 2016 Serial Key AVG Antivirus Antivirus 2016 Serial Key Backup app Battery life tips Best offline map Boot Animation Budget Smart phone Camera security app Charger tips Cinema news City racing 3d unlimited money apk Clash of clans Hack apk Computer tips Computer tips and software CPU testing apk Ekalapai keyboard Facebook like Facebook tips Facebook videos download new way Fingers print lock Free purchase Free Recharge Gadgets - Offers Zone Google indore map Hard Reset tips How to any Android mobile Unlock How to candy crush life lime Hack How to change ur operator How to create blog How to delete duplicate files permanent Android devices How to install Lollipop on pc How to know IMEI num How to root How to root Android device I phone tips IDM crack Live tamil Channel Low budget windows 10 lap Mobile details Mobile tips MobileAwareness Mx player pro New Mobile New WhatsApp Offer Omni Swipe One of the best Android mobile app One of the best Android Notification app One of the best Android photo editing App Otg என்றால் என்ன? Payum puli Movie Pen drive tips Photoshop Tutorial Playstore Application tips Ram increase tips RAR File tips Recovery app Root tips Samsung tips Secret code Smart app lock Subway surfers mod apk Sunday special Game System App Remover Tamil tips Technology Tips&Trick Thala Useful Wepsites Volume increase app Wepsite create Whatsapp tips Whatsapp trick WiFi Connection how to Secure WiFi hack WiFi tips WinRAR Setup Xbooster pro YouTube tips YouTube trick YouTube video tips Zip தல டீசர்

உங்கள் கணனியில் இருக்கக் கூடிய எந்த ஒன்றினையும் ஒருசில நொடிப் பொழுதுகளில் தேடிப் பெற்றுக்கொள்ள உதவும் மென்பொருள்



நாம் எமது கணனியில் ஏராளமான கோப்புக்கள் ஆவணங்கள் போன்றவற்றினை சேமித்து வைத்திருப்போம் அல்லவா?

இதன் போது குறிப்பிட்ட ஏதாவது ஒன்றினை நீங்கள் தேடிப் பெற வேண்டிய சந்தர்பத்தில் அதனை நீங்கள் கணனியில் சேமித்த இடம் மறந்து விட்டால் என்ன செய்வது?

இவ்வாறான சந்தர்பங்களில் Windows கணனியில் தரப்பட்டுள்ள Search எனும் வசதியை பயன்படுத்துவோம் அல்லவா?

அனால் அவ்வாறு கோப்புக்கள் ஆவணங்களை தேடிப்பெற்றுக் கொள்வதற்கு Windows கணனியில் தரப்பட்டுள்ள Search எனும் வசதி அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது.




இருப்பினும் Everything எனப்படும் Windows கணனிக்கான மூன்றாம் நபர் மென்பொருளானது எமது கணனியில் இருக்கக் கூடிய எந்த ஒன்றினையும் மிக இலகுவாகும் ஒரு சில நொடிப்பொழுதிலும் தேடிப்பெற்றுக் கொள்ள உதாவுகின்றது.


வெறும் 334 KB அளவையே கொண்டுள்ள இந்த சிறிய மென்பொருளை எந்த ஒரு கணணியிலும் மிக இலகுவாக நிறுவி பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இந்த மென்பொருளை பயன்படுத்தி கோப்புக்களை, அல்லது கோப்புறைகளை நீங்கள் தேடும் போது அதன் பெயரை உள்ளிட்டோ அல்லது குறிப்பிட்ட கோப்பிற்கான வடிவத்தை (Format) உள்ளிட்டோ தேடிப்பெறலாம்.



உதாரணமாக உங்கள் கணனியில் இருக்கும் Sample.Pdf எனும் கோப்பினை தேடிப்பெற Sample என்பதனை  குறிப்பிட்ட மென்பொருளில் தட்டச்சு செய்து தேடிப்பெற முடிவதுடன் *.pdf என தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் உங்கள் கணனியில் இருக்கக் கூடிய அனைத்து pdf கோப்புக்களும் பட்டியல் படுத்தப்படும் பின் உங்களுக்குத் தேவையான Sample.pdf என்பதனை பெற்றுக்கொள்ளலாம்.



மேலும் குறிப்பிட்ட மென்பொருள் மூலம் உங்கள் கணனியில் இருக்கக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட வெவேறான வடிவங்களில் அமைந்த கோப்புக்களை தேடிப்பெறவும் முடியும்.



உதாரணத்திற்கு உங்கள் கணனியில் .doc வடிவில் அமைந்த அனைத்து Microsoft Word ஆவணங்களையும் .mp3 வடிவில் அமைந்த அனைத்து பாடல்களையும் தேடிப்பெற விரும்பினால் *.doc|*.mp3 என தட்டச்சு செய்வதன் மூலம் தேடிப்பெறலாம்.


கணனியை பயான்படுத்தும் எந்தா ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தைக் கொண்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால்

 கீழுள்ள இணைப்பில் செல்க.

DownloadEverything


கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...?

ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும்.

மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு  டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது  இலகுதானே?

எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ?

முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

Step 1

மொபைலில் உள்ள வாட்ஸ் ஆப்-பை ஓபன் செய்து, மேல் வலது புறத்திலுள்ள மூன்று புள்ளிகள் போன்ற அமைப்பை க்ளிக் செய்து அல்லது ஆண்டிராயிட் மொபைலில் ஆப்சன் பட்டனை அழுத்தி ... ,  'வாட்ஸ்ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.


Step 2

இப்பொழுது மொபைலில் QR ரீடர் ஓபன் ஆகி இருக்கும். PC / லேப்டாப்பில், கூகிள் க்ரோம் பிரவுசரில் "web.whatsapp.com" என்ற லிங்கை டைப் செய்து, திரையில் தோன்றும் code -ஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

Step 3
ஸ்கேன் செய்த அடுத்த நிமிடம் PC / லேப்டாப்பில் கான்டாக்ட்ஸ் மற்றும் கான்வர்சேஷன் திரையில் தோன்றி வாட்ஸ் ஆப் பயன்படுத்த தயாராகி விடும்.

புதிய மெசேஜ் வந்தால் notify செய்யும் ஆப்ஷன்-ஐ PC / லேப்டாப்பில் on செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிதாக வரும் மெசேஜ் திரையில் பாப் அப் ஆகும்.

Step 4

இனி  புதிதாக ஒரு சாட்-ஐ தொடங்கலாம். நமது ப்ரொபைல் படம் மற்றும் ஸ்டேடஸ்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் PC / லேப்டாப்பிலும் இருக்கும். இதில் அழிக்கப்படும் மெசேஜ்கள் மொபைலிலிருந்தும் அழிந்து விடுமாறு இது sync செய்யப்பட்டுள்ளது.

Step 5

மொபைலிலிருந்து 'வாட்ஸ் ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தற்போது க்ளிக் செய்தால், லாஸ்ட் ஸீன் மற்றும் PC / லேப்டாப்பிலிருந்து லாக் அவுட் செய்து கொள்ளும் ஆப்ஷன்கள் இருக்கும்.

கணினி / லேப்டாப்பில்  வாட்ஸ் ஆப்  பயன்படுத்துவது  குறித்து வாட்ஸ் ஆப்-பின் உதவி பக்கம் 
எளிமையாக விளக்கும் வீடியோ
https://youtu.be/4MvT2LddFKQ

வாட்ஸ் ஆப் வெப்' - குறிப்பிடும்படியான அம்சங்கள்

  • PC / லேப்டாப்பில் பெரிய திரை என்பதால்,மொபைலில் இருந்து சாட் செய்யும் போது தோன்றும் மெசேஜ்களை விட இதில் இன்னும் கூடுதல் மெசேஜ்கள் தோன்றும்.
  • வாட்ஸ் ஆப் வெப்பிலிருந்து லாக் அவுட் செய்த பிறகு, மறுமுறை PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த மீண்டும் QR code ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே இருக்கும் கான்டாக்ட்ஸ் மற்றும் குரூப்பிற்கு மெசேஜ் செய்ய முடியுமே தவிர, புதிதாக ஒரு குரூப் உருவாக்க முடியாது.
  • புது மெசேஜ் வந்தால் PC / லேப்டாப்பிலும் நோட்டிபிக்கேசன் வரும்.
  • வாட்ஸ் ஆப் வெப்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து பயன்படுத்த வேண்டுமென்றால், மொபைலிலும்   இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
  • டைப் செய்ய ஏதுவாக, பெரிய திரையில் மெசேஜ்களை விசாலமாக பார்க்கும் வசதி தவிர வேறு வாட்ஸ் ஆப் வெப் கென பிரத்தியேகமாக எந்த வசதியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget