தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தொலைக்கக் கூடாத விஷயங்கள்



கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்களை நாம் தொலைக்கவே கூடாது. ஏதேனும் ஒரு வகையில் அவற்றைப் பதிவு செய்து வைத்து எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
 


விண்டோஸ் ப்ராடக்ட் கீ:


JuK9fug.jpg




 இது சற்றுப் பெரிய விஷயமாகும். ஏதோ காரணத்திற்காக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால், உங்களுக்கு வழங்கப்பட்ட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அவசியம் தேவைப்படும். இது உங்களுக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டருக்கான பணம் செலுத்தியமைக்கான ரசீதில் டைப் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது கம்ப்யூட்டரின் சி.பி.யு. கேபின் அடிப்பாகத்திலோ, பக்க வாட்டுப் பகுதியிலோ ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருக்கலாம். எனவே, கம்ப்யூட்டர் வாங்கியவுடன், இந்த ப்ராடக்ட் கீயினை நன்றாகத் தெரியும் வகையில் போட்டோ எடுத்து, அதனை ஒரு ஜேபெக் பைலாகப் பல இடங்களில் பதிந்து வைக்கலாம்.


அதே போல, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்று கேட்கப்படும். முதலில் வழங்கப்படும் பாஸ்வேர்டினை, மறக்க இயலாத வகையில் பதிவு செய்து, மீண்டும் கிடைக்கும் வகையிலான இடத்தில் வைக்க வேண்டும். முதன் முறை பதிவின் போது, மாற்றாக மின் அஞ்சல் அக்கவுண்ட் கேட்கப்பட்டாலோ, தொலைபேசி எண் கேட்கப்பட்டாலோ, நீங்கள் வழங்கியவற்றை நினைவில் கொள்ளும் வகையில், அதனை ஒரு டாகுமெண்ட்டில் பதிவு செய்து, அந்த டாகுமெண்ட்டினையும் பத்திரமாக வைக்கவும். உங்களுக்கு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் உங்கள் முகவரிக்கே இந்த டாகுமெண்ட்டினை அஞ்சல் செய்து, சேவ் செய்து வைத்திட்டால், எங்கிருந்து வேண்டும் என்றாலும், அதனைத் திரும்பப் பெறலாம்.



ஆக்டிவெஷன் கீகள்:


0Pfugas.png

 ப்ராடக்ட் கீ என்பது, செக்யூரிட்டி புரோகிராம் போன்ற சாப்ட்வேர் ஒன்றை இயக்குவதற்கான குறியீடுகள் கொண்ட தொடர் டெக்ஸ்ட் அல்லது எண் அல்லது இரண்டும் கலந்தவையாக இருக்கும். சில வேளைகளில் இந்த தகவல்கள் ஒரு மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு, அவற்றை டவுண்லோட் செய்திடுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். நீங்கள் குறிபிட்ட புரோகிராமினை டிஸ்க் வடிவில் வாங்கியிருந்தால், அது ஒரு சிறிய தாளில் அச்சிடப்பட்டு, டிஸ்க் உள்ள பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கும். அல்லது, அந்த டிஸ்க் சுற்றி வரும் தாளில் அச்சிடப்பட்டிருக்கும். இந்த தகவல்களை நீங்கள் ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.



நிச்சயம் நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கும் ஒரு புரோகிராமின் இந்த அவசியத் தகவல்களை வேறு யாரும் சேவ் செய்து வைக்கப்போவதில்லை. எனவே, நீங்கள் கவனம் எடுத்து மேற்கொள்ள வேண்டிய வேலை இது. எனவே, ஆக்டிவேஷன் கீ தாங்கி வரும் மின் அஞ்சலை அழித்துவிட வேண்டாம். அஞ்சல் தொகுப்பில் அதனை வைப்பதோடு, அந்த டெக்ஸ்ட்டை ஒரு பைலாக மாற்றி, நினைவில் வரும் இடத்தில் சேவ் செய்து வைக்கவும். அதே போல, இந்த தகவல்களைத் தாங்கி வரும் தாளையும் அழித்துவிட வேண்டாம். அதில் அடங்கியுள்ள கீ தகவல்களை பத்திரமாக மாற்றி அமைத்து சேவ் செய்திடவும். மறந்துவிட வேண்டாம். நீங்கள் சாப்ட்வேர் மட்டுமின்றி, அதன் கீக்கும் சேர்த்தே பணம் செலுத்தியுள்ளீர்கள். பணம் செலுத்தி வாங்கிய பொருளைப் பாதுகாப்பாக வைப்பது போல, ஆக்டிவேஷன் கீ சார்ந்த தகவல்களையும் வைத்திருக்க வேண்டும்.



ஒரிஜினல் பேக்கேஜிங்: 


m3PEFaR.jpg

ஏதேனும் எலக்ட்ரானிக் சாதனம் ஒன்றை வாங்கினால், அது வைக்கப்பட்டிருக்கும் ஒரிஜினல் பேக்கேஜிங் அட்டையைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் அந்த சாதனத்தில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால், அல்லது பழுது பார்க்க அனுப்புவதாக இருந்தால், ஒரிஜினல் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்புவது நல்லது. மேலும், அது அனுப்பப் பட்ட அட்டைப் பெட்டி தான், அதனைத் திருப்பி அனுப்புவதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், நீங்கள் சில்லரை வியாபாரியிடம் வாங்கி இருந்து, பொருளை அவரிடம் திருப்பி அனுப்பும் நிகழ்வில், அவர் அதனை அவருக்கு வழங்கிய பொருளை உற்பத்தி செய்த அல்லது மொத்தமாக விற்பனை செய்த நிறுவனத்திற்கு அனுப்ப, அந்த அட்டைப் பெட்டி தேவைப்படலாம்.
 


மூல துணைப் பொருட்கள்:

v2F98U0.jpg?1



மின்சக்தியைப் பெற வழங்கப்படும் கேபிள்கள், அடாப்டர்கள் மற்றும் உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட துணைப் பொருட்களை, அவற்றை உடனடியாகப் பயன்படுத்துகிறீர்களோ, இல்லையோ, பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். இவை பின் நாளில் நிச்சயம் தேவைப்படலாம். அதே போல, இந்த சாதனத்தைத் திருப்பி தந்துவிட்டு, புதிய ஒன்றை அதற்குப் பதிலாக வாங்க விரும்பினாலும், இந்த துணைப் பொருட்களையும் சேர்த்தே நாம் திரும்ப வழங்க வேண்டியதிருக்கும். வீட்டில் அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள் வாங்குவதாக இருந்தால், துணை சாதனங்கள் மேலாக, அல்லது தாள்களை இணைத்து, அந்த சாதனம் எதனுடன் வந்தது என்று குறித்து வைக்கவும்.

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget