தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

பிளாக் (Blog) உருவாக்குவது எப்படி- How to create blog

பிளாக் (Blog) உருவாக்குவது எப்படி-1

பிளாக் உருவாக்க ஜிமெயில் அக்கவுண்ட் தேவை. ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் முதலில் ஜிமெயில் அக்கவுண்டை துவக்கவும் (உருவாக்கவும்)


சரி, இப்போது ஜிமெயில் அக்கவுண்ட் துவக்கிவிட்டீர்கள்

இனி என்ன செய்வது?

இந்த லிங்கை கிளிக் செய்வும்.  இப்போது கீழே உள்ளது போன்ற பக்கம் தோன்றும்.


அதில்
1 ல் யூசர் நேம் டைப் செய்யவும்

2 ல் பாய் வேர்டு டைப் செய்யவும்

3  singin  கிளிக் செய்யவும்
singin  கிளிக் செய்யதபிறகு கீழ் வரும் பக்கம் தோன்றும்தோன்றும்
அதில் Create your blog now (4) ஐ கிளிக் செய்யவும்.


(மேற்கண்ட விளக்கப்படம் சரியாக தெரியவில்லை என்றால் படத்தினை கிளிக் செய்யவும். பெரியதாகவும், தெளிவாகவும் தெரியும்.)

இப்போது கீழ்கண்ட பக்கம் தோன்றும்

5ல் உங்கள் துவக்கப்போகும் பிளாக்கின் தலைப்பை டைப் செய்யவும்

(இதில் ஆங்கிலத்தில் மட்டுமே தரமுடியும். தமிழில் தலைப்பு தேவையெனி்ல் வேறு இடத்தில் டைப் செய்து காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யலாம்.
தமிழில் டைப் செய்ய http://tamileditor.org இந்த தளத்தை பயன்படுத்தலாம்)
6ல் (Blog address URL) பிளாக்கின் பெயர் டைப்செய்யவும்.
பின்னர் அதற்கு கீழே உள்ள Check Availability ஐ கிளிக் செய்யவும்
நீங்கள் கொடுத்த பெயரில் ஏற்கனவே பிளாக் இருந்தால் வேறு பெயரை தேர்ந்தெடுக்கச் சொல்லும். அதற்கு ஏற்றவாறு பெயரை தேர்வு செய்து Continue (7) ஐ கிளிக் செய்யவும்
அடுத்து மேலே உள்ள பக்கம் தோன்றும். அதில் 8 template உள்ளது. இதில் உங்களுக்கு எந்த டிசைன் பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து, பின்னர் Continue பட்டன் (8)ஐ கிளிக் செய்யவும். 

இந்த டிசைன் இல்லாமல் வேறு டிசைனையும் (template) நாம் தேர்வு செய்யலாம். இது குறித்து பின்னர் விரிவாக பார்க்கலாம்.

அடுத்து கீழே உள்ள பக்கம் தோன்றும் அதில் ஒன்றும் செய்ய தேவையில்லை. Start blogging (9)ஐ கிளிக் செய்யுங்கள் போதும்




மேலே உள்ள பாக்ஸில் தான் நீங்கள் உங்கள் பிளாக்கில் இடம் பெற வேண்டிய செய்திகளை டைப் செய்ய வேண்டும். இப்போது அது வேண்டாம். நீங்கள் உருவாக்கியுள்ள பிளாகின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை அறிய நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். எனவே View Blog  (10)ஐ கிளிக் செய்து நீங்கள் உருவாக்கியுள்ள பிளாக்கை பார்த்து மகிழுங்கள்

(விளக்கப்படங்கள் தெளிவாக தெரியவில்லையென்றால் அவற்றின் மீது கிளிக் செய்து படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)


பிளாக்கில் போஸ்டிங் (Posting) இடுவது எப்படி?
நீங்கள் பிளாக் உருவாக்கி விட்டீர்கள். இப்போது இதில் இப்போது போஸ்டிங் (Posting) அதாவது நீங்கள் விரும்பிய செய்தியை உங்கள் பிளாக்கில் எப்படி வெளியிடுவது என்று பார்ப்போம். 

கீழே உள்ள விளக்கப்படத்தை கவனிக்கவும்கவனிக்கவும்


அதில் அம்புக்குறியிட்டு உள்ள New Post (1) ஐ செலக்ட் செய்யவும்


2ல் தலைப்பை டைப் செய்யவும். அல்லது வேறு எங்காவது டைப் செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

3ல் பிளாக்கில் நீங்கள் வெளியிட விரும்பும் செய்தியை டைப் செய்யவும். 

தமிழில் டைப் செய்ய விரும்பினால் 11 என்ற எண்ணால் அம்புக்குறியிட்டுள்ள இந்தி எழுத்துக்கு அருகில் உள்ள சிறிய அம்புக்குறி பட்டனை கிளிக் செய்து  தமிழ் என்பதை செலக்ட் செய்து தமிழில் டைப் செய்யலாம்.

அல்லது வேறு எங்காவது டைப் செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.
(தமிழில் டைப் செய்ய http://tamileditor.org இந்த தளத்தை பயன்படுத்தலாம்)

4ஐ கிளிக் செய்து நீங்கள் விரும்பிய படத்தை இடம் பெற செய்யலாம்.

5ஐ கிளிக் செய்து நீங்கள் விரும்பிய வீடியோவை இடம் பெற செய்யலாம்.

6ஐ கிளிக் செய்து நீங்கள் டைப் செய்துள்ள செய்தியை அல்லது தகவலை அலைன்மெண்ட் (Alignment) செய்து கொள்ளவும்.

7ல் எழுத்தின் கலரை மாற்றிக்கொள்ளலாம்.

8ல் எழுத்தின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

9ல் எழுத்தின் ஸ்டைலை மாற்றிக்கொள்ளலாம் (தமிழில் மாற்றும் வசதியில்லை, ஆங்கில எழுத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்)

2ல் தலைப்பாக என்ன இடம்பெற செய்தீர்களோ அதையே 10ல் காப்பி செய்யது பேஸ் செய்து கொள்ளவும்.

12ல் லிங்க கொடுக்கலாம். உங்களது தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வார்தையை அல்லது வரியை கிளிக் செய்தால் அது வேறு வலைதளத்திற்கு செல்லுமாறு செய்வது. 



பிளாக் சம்மந்தமான தொழில்நுட்ப செய்திகளுக்கு 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget