நீங்கள் உள்ளிடும் தமிழ் சொற்களை Mp3 வடிவத்திற்கு மாற்றித்தரும் இணையதளம்.
நாம் தட்டச்சு செய்யக்கூடிய எழுத்துக்களை உச்சரிக்ககூடிய ஏராளமான மென்பொருள்களும் இணையதளங்களும் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும் அவைகள் தமிழ் மொழிக்கு ஆதரவளிப்பதில்லை.
அவ்வாறான மென்பொருள்கள் மூலமோ அல்லது இணையதளங்கள் மூலமோ நாம் தமிழ் சொற்களை ஆங்கில மொழியில் தட்டச்சு செய்தாலும் கூட அவைகள் தமிழ் மொழியில் சரியக உச்சரிக்கப்படுவதில்லை.
உதாரணத்திற்கு கூகுளின் மொழிப்பெயர்ப்பு சேவையை பயன்படுத்தி "தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும்" எனும் வாக்கியத்தை நாம் உச்சரிக்கச் செய்தல் அது பின்வருமாறு அமையும். (Play Button ஐ சுட்டுக)
இந்த குறையை நிவர்த்தி செய்கிறது Mile (medical intelligence and language engineering lab) எனும் இணையதளம்.
இந்த தளத்தில் நீங்கள் தமிழ் மொழியில் தட்டச்சு செய்யக்கூடிய எழுத்துக்களை தெளிவான உச்சரிப்புடன் Mp3 வடிவில் தரவிறக்கிக்கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் தோன்றும் சாளரத்தில் "Speech for your input text has been synthesized.
Please click here to download the synthesized speech file" எனும் சொற்றொடரில் இருக்கும் click here என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட Mp3 ஒலி கோப்பை உங்கள்கணினிக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.
குறிப்பு: நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்தி இதனை மேற்கொள்பவர் எனின் இணைய உலாவியிலேயே இதனை இயக்கிப் பார்க்க முடியும்.
இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கும் Mp3 கோப்புக்கள் மிகவும் தெளிவாக உச்சரிக்கப்படுகின்றது.
உதாரணத்திற்கு இந்த தளத்தின் மூலம் உருவாக்கப்பட்ட "தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும்" எனும் சொற்றொடரின் Mp3 வடிவம் பின்வருமாறு.
எனவே நாம் Mile எனும் இணையதளத்தை பயன்படுத்தி உருவாக்கும் ஒலி வடிவங்கள் தெளிவான உச்சரிப்பை கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
நீங்களும் இந்த தளத்தை பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
Post a Comment