தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Otg என்றால் என்ன?

கிட்டத்தட்ட அனைத்து சிறிய இலத்திரனியல் உபகரணங்களும் USB(Universal Serial Bus) இணை பயன்படுத்துகின்றன. உங்கள் கணணி உடன் சாதனங்களை இணைக்க, TV or audio/video சாதனங்களை இணைக்க, தரவு பரிமாற்றம் என்பவற்றுக்கு USB தொழில்நுட்பமே பயன்படுகிறது. மேலும் Micro USB அதிகமா தற்போதைய SmartPhone மற்றும் Tablets இல் தரவு பரிமாற்ற மற்றும் மின்னேற்ற பயன்படுகின்றது. இந்த இடத்தில் தான் USB OTG பயன்பாடு தேவைப்படும். OTG என்பது On-The-Go ஆகும்.
ஏன் உங்களுடைய போன் இல் USB OTG இருக்க வேண்டும் ?
USB otg on Galaxyusb otg on PC
பதில் : USB On-The-Go இது ஒரு தரவு பரிமாற்ற தொழில்நுட்பம். அதாவது உங்கள் ஸ்மார்ட் போன் இல் Standard USB இனை பயன்படுத்த முடியும். உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் USB Flash Drive இல் உள்ள கோப்பு, இசை, வீடியோகளை எழுத, வாசிக்க, மாற்ற முடியும். உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் Tablets இவ்வேளை Host (or Master) ஆக தொழிற்படும். அதேநேரம் நீங்கள் கணணியில் ஸ்மார்ட்போனை இணைக்கும்பொழுது Slave ஆக மாறுவதன் மூலம் தரவை பரிமாற்றிக்கொள்ளும்.
USB எவ்வாறு வேலை செய்கிறது
சாதரணமாக USB Devices ஆனவை Master or Slave ஆகிய இரண்டு நிலைமையில்(Status) காணப்படும். உதாரணமாக PC ஐயும் Printer ஐயும் எடுத்துகொண்டால், PC ஆனது Master Device இலும் Printer ஆனது சாதாரணமாக Slave இலும் காணப்படும். PC இனால் USB மூலம் தரவை Printer இற்கு அனுப்பமுடியும். ஆனால் Printer ஆல் PC இற்கு தரவை அனுப்பமுடியாது( Printer இனால் PC இற்கு “READY To Receive” என மட்டுமே அறிவிக்கமுடியும்).
எப்பொழுதும் இரண்டு USB சாதனங்களை(Devices) தொடர்புபடுத்தும் போது அவை தகவல்தொடர்பு இணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றன. இவ்விணைப்பை கட்டுப்படுத்தும் சாதனம் எப்போதும் Master ஆக காணப்படும். பல சூழ்நிலைகளில் USB சாதனங்கள் செயல்படுகின்றன. ஒரு ஸ்மார்ட்போனை PC யுடன் இணைப்பது அடங்கலாக, தேவைக்கு ஏற்றப Master அல்லது Slave ஆக எடுத்து கொள்ளும்.
USB OTG எவ்வாறு வேலை செய்கிறது
USB On-The-Go உடைய ஒரு சாதனம் Master மற்றும் Slave இனை மாறி மாறி எடுத்து கொள்ளும் இயல்பை கொண்டு தொழிற்படுகிறது. அது இணைக்கப்படும் கருவியை பொறுத்தது. “A” சாதனம் இணைக்கப்பட்டால் அது “A-Device” என தெரிந்து இயல்புநிலை “Host” ஆக தொழிற்படும். அல்லது “B” சாதனம் இணைக்கப்பட்டால் இயல்பு உபகரண(Peripheral) நிலை ஆக தொழிற்படும்.
usb-and-otg
எடுத்துக்காட்டாக ஒரு USB OTG(Support) தொலைபேசி, ஒரு PC உடன் இணைக்கப்பட்டுள்ள போது அது ஒரு சாதாரண USB இணைப்பாக  அங்கீகரிக்கப்படும்(recognized).இங்கு PC ஆனது Master பாத்திரத்தை செய்கிறது.
பின்னர் தொலைபேசி ஒரு சிறிய Flash Drive உடன் இணைக்கப்பட்டுள்ளது என்றால், OTG மென்பொருள் தானாகவே தொலைபேசியை Master இற்கு மாற்றும். தற்போது Flash Drive – Slave ஆகும்.
USB OTG Devices
USB OTG இணைப்பை அங்கீகரிப்பது(recognizing) சிறிய சாதனைகளில் தற்போது அதிகரித்து வருகின்றது. பல பெரிய ஸ்மார்ட்போன்களும் இவ்தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. அவை Samsung Galaxys S4/S5, Nexus 5, HTC One and etc.   உங்களுடைய தொலைபேசியில் USB OTG இருக்கின்றதா என்பதை Google Play Store இல் உள்ள USB OTG Checkerமென்பொருளைக்கொண்டு சோதிக்கலாம்.

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget