தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Huawei அறிமுகப்படுத்த இருக்கும் பேட்டரியை ஐந்தே நிமிடத்தில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்ளலாம்

Huawei அறிமுகப்படுத்த இருக்கும் பேட்டரியை ஐந்தே நிமிடத்தில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்ளலாம்

ஸ்மார்ட் போன்களே உலகம் என்றாகிவிட்ட இன்றைய நிலையில் அதில் இருக்கக்கூடிய பேட்டரி காலியாகிவிடும் போது ஏற்படும் உணர்வுகளை நிச்சயம் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

smartphone-low-battery-Getty-Images.jpg

அதிலுள்ள பேட்டரி காலியான பின் அதனை மீண்டும் மின்னேற்றிக் கொள்வது சில சந்தர்பங்களில் அதைவிட சோதனையாக அமைந்துவிடும்.

_86703711_86703710.jpg

Huawei நிறுவனம் அண்மையில் அதன் இணையதளத்தில் வெளியிட்ட தகவலின்அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளதை உணர முடிகிறது.
ஐந்தே நிமிடத்தில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்ளலாம்.
Huawei நிறுவனம் தயாரித்து வரக்கூடிய பேட்டரியானது 3000 mAh திறன் கொண்ட பேட்டரியை 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்வதற்கு வெறும் 5 நிமிடங்களே எடுத்துக்கொள்கிறது. (இது இன்று புழக்கத்தில் இருக்கக்கூடிய பேட்டரியை விட 10 மடங்கு வேகமானதாகும்)
இரண்டே நிமிடத்தில் 68 சதவீதம் வரை மின்னேற்றலாம்.
மேலும் Huawei நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி 600 mAh திறனுடைய பேட்டரியை சோதித்ததில் அதனை 68 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்வதற்கு வெறும் 2 நிமிடங்களே செலவாகியுள்ளது.
வேகமாக இயங்கும் இன்றைய உலகில் Huawei நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பமானது ஸ்மார்ட் போன்களுக்கு மாத்திரம் அல்லது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அனைத்து இலத்திரனியல் சாதனங்களையும் வேகமாக மின்னேற்றிக் கொள்ள பேருதவியாக அமையலாம்

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget