360 Security செயலியானது உங்கள் Android சாதனத்துக்கு என அருமையான பல வசதிகளை தருகிறது.
360 Security எனும் செயலியானது உங்கள் Android சாதனத்துக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதுடன், உங்கள் Android சாதனத்தில் தேங்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்கிக் கொள்ளவும், பின்புலத்தில் (Background) இயங்கும் தேவையற்ற செயலிகளை முடக்கிக் கொள்ளவும் என இன்னும் பல்வேறு வசதிகளை தருகிறது.
அழகிய இடைமுகத்தை (Interface) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.
Boost: இதன் மூலம் Android சாதனத்தின் வேகத்தை அதிகரிக்கலாம்.
இந்த செயலியை திறந்தவுடன் முதலாவதாக தோன்றுவது Boost எனும் பகுதியாகும். இந்த பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கி RAM மற்றும் Battery போன்றவற்றின் அதிக பயன்பாடுகளை எடுக்கக் கூடிய செயலிகளை கண்டறிந்து அவற்றின் செயற்பாட்டை முடக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் Android சாதனத்தின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
Clean: நினைவகத்தை சேமிக்கலாம்.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள Clean எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் உள்ள செயலிகளால் சேமிக்கப்படும் தேவையற்ற கோப்புக்களையும் Android இயங்குதளத்தால் சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்களையும் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். இது Junk Files என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் நினைவகம்
Anti Virus: தீங்கு விளைவிக்கும் நிரல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள Anti Virus எனும் பகுதி மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வேட்டு வைத்து உங்கள் Android சாதனத்தின் செயற்பாட்டை பாதிக்கும் தீய நிரல்களில் இருந்தும் பாதுகாப்புப் பெறலாம்.
App Manager: செயலிகளை நிர்வகிக்கலாம்.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள App Manager எனும் பகுதியில் App Uninstaller, APK Manager, Move to SD Card எனும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
- App Manager பகுதியில் தரப்பட்டுள்ள App Uninstaller எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற செயலிகளை நீக்கிக்கொள்ள முடிவதுடன் Android சாதனத்தில் நிறுவப்பட்டு வரும் நீங்கள் பயன்படுத்தாத செயலிகளையும் நீக்கிக்கொள்ள முடியும். (ஆனால் இதற்கு உங்கள் Android சாதனம் Root செய்யப்பட்டிருக்க வேண்டும்.)
- App Manager பகுதியில் தரப்பட்டுள்ள APK Manager பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய அனைத்து APK கோப்புக்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடிவதுடன் அவற்றை Android சாதனத்தில் நிறுவிக் கொள்ளவோ அல்லது நீக்கிக் கொள்ளவோ முடியும்.
- App Manager இல் தரப்பட்டுள்ள Move to SD Card இந்த வசதி மூலம் உள்ளக நினைவகத்தில் இருக்கக்கூடிய செயலிகளை SD Card நினைவகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
Privacy: தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கலாம்.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள Privacy பகுதி மூலம் உங்கள் Android செயலிகளை ஏனையவர்களால் திறக்க முடியாதவாறு Pattern Lock இட முடிவதோடு உங்களின் மிகவும் தனிப்பட்ட அல்லது இரகசியமான தொடர்புகளை ஏனையவர்களின் கண்களுக்கு படாதவாறு அமைத்துக் கொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு நபருடன் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் Call Log, SMS இல் தோன்றாமல் 360 Security மூலம் மாத்திரம் பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
Call & SMS Filter: தேவையற்ற அழைப்புக்கள், குறுஞ்செய்திகளை தடை செய்யலாம்.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள Call & SMS Filter எனும் பகுதி மூலம் உங்களுக்கு வரக்கூடிய தேவையற்ற அழைப்புக்களின் அல்லது குறுஞ்செய்திகளின் இலக்கங்களை உள்ளிட்டு வைப்பதன் மூலம் அவ்வாறான தொந்தரவு தரக்கூடிய அழைப்புக்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். (குறுஞ்செய்திகளை தடை செய்வது எனின் உங்கள் Android சாதனத்தின் இயங்குதளம் Android Lollipop இயங்குதளத்தை கொண்டிருத்தல் வேண்டும்.)
Data Monitor: தரவுப்பாவனையை கட்டுப்படுத்தலாம்.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள Data Monitor எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் இருந்து இணையத்துடன் தொடர்புபடும் செயலிகளை கண்காணிக்கவும் மாதாந்த தரவுப்பாவனை எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும்.
Find My Phone: இழந்த உங்கள் Android சாதனத்தை கட்டுப்படுத்தலாம்.
இந்த செயலியில் தரப்பட்டுள்ள Find My Phone பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தை நீங்கள் தொலைத்து விட்டால் அதனை கட்டுப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது இந்த செயலி நிறுவப்பட்ட நிலையில் உங்கள் Android தொலைந்து விட்டால் www.findphone.360safe.com எனும் தளத்தின் ஊடாக உங்கள் Android சாதனம் இருக்கும் இடத்தை கண்டறியவும், அதில் ஒரு ஒலியை ஏற்படுத்தவும், அதில் உள்ள தரவுகளை நீக்கிக் கொள்ளவும் முடியும். (இறைவன் நாடினால் இது தொடர்பான விரிவான பதிவை எதிரகாலத்தில் பார்ப்போம்.)
மொத்தத்தில் ஒவ்வொரு Android பயனர்களுக்கும் மிகவும் பயனளிக்கக்கூடிய பல வசதிகளை வழங்கும் இந்த செயலியை உலகளாவிய ரீதியில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுடுக.
Post a Comment