தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க

ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க

ஆண்ட்ராய்ட் (Android) - கூகுள் நிறுவனத்தின் வெற்றி தயாரிப்புகளில் ஒன்றான மொபைல் மற்றும் டேப்லட்களுக்கான இயங்குதளம். ஐபோன் தொழில்நுட்பத்தை காப்பி அடிப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்க்கு முக்கிய காரணம் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதும், குறைந்த விலையிலேயே கிடைப்பதும் தான்.

இந்தியாவிலும் ஆண்ட்ராய்ட் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் தமிழ் தெரிந்தவர்களுக்கான முக்கிய தேவை "ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதும், தமிழ் எழுத்துக்களை படிப்பதும்" தான்.

ஆண்ட்ராய்டில் தமிழ் படிக்க:

ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த மாற்றமும் செய்யாமலேயே படிக்கலாம். 

அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ப்ரவ்சர் Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் ப்ரவ்சரில் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.

ஆண்ட்ராய்ட் எந்த பதிப்பாக இருந்தாலும் Opera Mini உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்கலாம். அதற்கு நீங்கள் பின்வரும் மாற்றத்தை செய்ய வேண்டும்.

Opera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு தமிழ் தளங்களை  பார்க்கலாம்.

கவனிக்க: ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பாக இருந்தாலும் பேஸ்புக் உள்ளிட்ட சில அப்ளிகேசன்களில் தமிழ் சரியாக தெரியாமல் இருக்கலாம். அதற்கு அந்த அப்ளிகேசன் தான் காரணம். அதை நம்மால் சரி செய்ய இயலாது.

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத:

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,


Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்) (இது தான் நான் பயன்படுத்துகிறேன்)

Tamilvisai

இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும். (ஆண்ட்ராய்ட் அனுமதிகள் பற்றி ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா? என்ற பதிவில் பார்க்கவும்).



இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு,  ஆண்ட்ராய்டில் Settings => Language & input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.



பிறகு மொபைலில் நீங்கள் எழுதும் போது திரையின் மேலே Select Input என்று இருப்பதை கீழே Swipe செய்து அதில் நீங்கள் நிறுவியுள்ள அப்ளிகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.

மீண்டும் இது போன்றே மொபைல் கீபோர்டுக்கு மாறிக்கொள்ளலாம்.

கவனிக்க: இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.

வேறு ஏதும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget