திரையில் எழுதுங்கள், தேவையானதை தேடிப்பெருங்கள் . கூகுள் தரும் ஆண்ட்ராய்டு செயலி
ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு என ஜிமெயில், யூடியூப்,கூகுள் குரோம், கூகுள் டிரைவ், கூகுள் பிளஸ் என ஏராளமான செயலிகளை கூகுள் தருகிறது.
எனினும் கூகுள் Gesture Search எனும் செயலியை அதிகமானவர்கள் அறிந்ததில்லை.
இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் திரையில் எழுதுவதன் மூலம் (A-Z), நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்கள் (CONTACTS) , இணைய உலாவியில் சேமித்து வைத்திருக்கும் இணையதளங்கள், உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய இசைகள் பாடல்கள், நிறுவப்பட்டுள்ள செயலிகள் மற்றும் அமைப்புக்கள் (Settings) என எந்த ஒன்றையும் மிக விரைவாக தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் A என திரையில் எழுதினால் A எழுத்தை கொண்டிருக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் திரையில் தோன்றும்.
மேலும் திரையின் வலது பக்கம் இருந்து இடப் பக்கமாக கோடு ஒன்றை கீறுவதன் மூலம் எழுதிய எழுத்துக்களை நீக்கிக் கொள்ள முடியும்.
மேலும் இதன் அமைப்புக்களுக்கான (Settings) பகுதி மூலம் தேடல் முடிவில் எவ்வாறான அம்சங்கள் தோன்ற வேண்டும் என்பதையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு தேடல் முடிவில் செயலிகள் தோன்றுவதை நீங்கள் விரும்பாவிட்டால் அதனை அமைப்புக்களுக்கான பகுதி மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும்.
Post a Comment