தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

One App 29 Features Android speed up App



உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதனை நீக்குவதன் மூலம் குறிப்பிட்ட சாதனத்தை வேகமாக இயங்கச் செய்யவும் இன்னும் பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ளவும் உதவுகிறது All In One எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.

இதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.


  • Junk & Cache Cleaner

ஒரு முறை சுட்டுவதன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருக்கக் கூடிய தேவையற்ற கோப்புக்கள், தற்காலிக கோப்புக்கள் என அனைத்தையும் நீக்கிக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனின் நினைவகம் மீதப்படுத்தப்படுகிறது.



  • Task Killer & Memory Booster

ஆண்ட்ராய்டு போனில் நம்மை அறியாமல் பின்புலத்தில் இயங்கும் செயலிகள் காரணமாக ஸ்மார்ட் போனில் உள்ள Battery இன் சக்தி மிக விரைவில் தீர்ந்து விடுவதுடன், குறிப்பிட்ட சாதனத்தின் மந்த கதியான செயற்பாட்டுக்கும் அதுவே காரணமாக அமைந்து விடுகிறது. எனவே இவ்வாறு பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முடக்கிக் கொள்ள  All-In-One Toolbox (Cleaner) எனும் இந்த செயலி உதவுகிறது.


  • App Manager
இந்த செயலி மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருக்கக் கூடிய எத்தனை APK கோப்புக்களையும் ஒரே நேரத்தில் நிறுவிக்கொள்ள முடிவதுடன், நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற செயலிகளை ஒரே நேரத்தில் தெரிவு செய்து அவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.

மேலும் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை Backup செய்து அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கவும் முடியும்.

அத்துடன் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் துவங்கும் போது துவங்க ஆரம்பிக்கும் செயலிகளை முடக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனை மிக வேகமாக துவங்கச் செய்ய முடியும்.

  •  Privacy Protector

உள்வந்த மற்றும் வெளிச் சென்ற அழைப்புக்கள் தொடர்பில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் (Call Logs), நீங்கள் இணையத்தை வலம்வரும் போது சேமிக்கப்பட்ட தகவல்கள், சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள் மற்றும் Copy, Past செய்த தகவல்கள் (Clipboard History) போன்ற தனிப்பட்ட தகவல்களை நீக்கிக் கொள்வதற்கான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.




  • Device Info Reader

அத்துடன் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் RAM, CPU, Battery, Screen போன்ற அனைத்து வன்பொருள்கள் தொடர்பான தகவல்களையும் விலாவாரியாக அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இதன் சமீபத்திய பதிப்பில் Notification பகுதியில் இருந்தவாறே உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை நிர்வகிப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்ட செயலியின் அமைப்புக்களுக்கான (Setting) பகுதியின் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலி மூலம் பெற முடியுமான ஒரு சில முக்கிய வசதிகளையே நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டினோம் இவைகள் தவிர இன்னும் ஏராளமான பல வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன.


அத்துடன் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Plugins வசதி மூலம் இன்னும் அருமையான வசதிகளை பெற முடிகிறது.

இந்த செயலியை நாம் ஏன் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்?

  • உலகளாவிய ரீதியில் பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த செயலியானது Google Play Store இல் 5 இற்கு 4.6 நட்சத்திர மதிப்பை பெற்றுள்ளது.
  • பயன்படுத்துவதற்கு இலகுவான மற்றும் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது.
  • தனித்தனி செயலிகள் மூலம் பெற வேண்டிய அனைத்து வசதிகளும் இந்த ஒரு செயலியிலேயே தரப்பட்டுள்ளது.

நீங்களும் இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.




Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget