தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

100 எம்.பி. அளவுள்ள பைல்களை இமெயிலில் இலவசமாக அனுப்பிட

பிரபு:100 எம்.பி. அளவுள்ள பைல்களை இமெயிலில் இலவசமாக அனுப்பிட

மெயிலில் பைல்களை நாம் இணைத்து அனுப்புகையில் 25 எம்.பி.வரையில் அனுப்ப முடியும். அதற்குமேல் அளவுள்ள பைல்களை அனுப்புவது சிரமமே. ஆனால் இந்த இணையதளத்தில் 100 எம்.பி.வரையில் இலவசமாகவும் 20 ஜிபி வரையில் நீங்கள் உறுப்பினராகியும் அனுப்ப வசதி செய்துள்ளார்கள். இந்த இணையதளம் காணஇங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட இணைய பக்கம தோன்றும்.
இதில் நீங்கள் அனுப்பவேண்டிய பைலினை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் வலதுபுறம் நீங்கள் அனுப்பிய பைலினை பற்றிய விவரம் கிடைக்கும். 100 எம்.பி கொள்ளளவு உள் எவ்வளவு பைலினை வேண்டுமானாலும் இணைத்துக்ககொள்ளுங்கள். அடுத்து உள்ள கட்டத்தில் நீங்கள் அனுப்ப வேண்டிய இமெயில் முகவரியை தட்டச்சு செய்யவும். மேலும் விவரம் எதும் தெரிவிக்க விரும்பினால் அதற்கான கட்டத்தில் தட்டச்சு செய்யவும்.பின்னர் இடதுபுறம் உள்ள Send Transfer கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நாம் அனுப்பிய தகவலின் விவரம்அறிய view your transfer கிளிக செய்து அறிந்துகொள்ளலாம். மேலும் பைல்கள் அனுப்ப விரும்பினால் இதில் உள்ள New Transfer கிளிக் செய்து மேலே சொன்ன வழி முறைகளில் மீண்டும் பைல்களை அனுப்பி வைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
பிரபு .....
Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget