இன்று இரவு அஜித் ரசிகர்களுக்கு விருந்து!
வீரம்’ படத்திற்கு பின், அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் வேதாளம் படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. ஸ்ருதி, லட்சுமிமேனன், சூரி என பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார்.
அனிருத் இசையில் உருவான இப்பட பாடல்கள் அவரது பிறந்தநாள் அன்றே வெளியாக இருக்கிறது. இப்பட ‘பர்ஸ்ட் லுக் ஸ்டில்’லையும் வெளியிட்டனர். ஸ்டில்லில் உள்ள அஜித்தின் தோற்றத்தையும், படத்தின் தலைப்பையும் கேட்டு, அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
இந்நிலையில் மேலும் இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இப்படத்தின் டீசர் இன்று இரவு வெளியிட உள்ளனராம். இதனை மதன் கார்க்கி அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment