தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

பிரபு;Block செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்வது எப்படி?

பிரபு;Block செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்வது எப்படி?

அலுவலகத்திலோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் சில தளங்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்ப்போம்.


வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?என்று முன்பொரு பதிவில் சொல்லி இருந்தேன். அதே சமயத்தில் பிளாக் செய்யப்பட்ட ஒரு தளத்தை எப்படி ஓபன் செய்வது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். கற்போம் இதழை தரவிறக்கம் செய்ய முடியவில்லை, Mediafire பிளாக் ஆகி உள்ளது என்று சொன்னார் ஒருவர். பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.


அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது.

விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதைhttp://www.ezprxy.com என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும்.
3

எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது.


மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது.


இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும்.

இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும். நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன். ஏடாகூடமாக எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல.

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget