பிரபு;Android சாதனத்தில் இருக்கும் அனைத்து கோப்புக்களையும் ஒரே பார்வையில் பார்க்கவும் நிர்வகிக்கவும் உதவும் செயலி
கணினியின் மூலம் மேற்கொள்ளும் ஏராளமான செயற்பாடுகளை இன்றைய Smart சாதனங்கள் மூலம் மேற்கொள்ள முடிவதால் எமது Smart சாதனங்களில் ஏராளமான கோப்புக்கள் தேங்கிவிடுவது உண்டு.
உதாரணத்திற்கு நாம் ஆரம்பத்தில் கணினி மூலம் மேற்கொண்ட Microsoft ஆவணங்களை இன்று எமது Smart சாதனங்கள் மூலமே மேற்கொள்ள முடியும் இதனால் நாம் உருவாக்கும் அனைத்து ஆவணங்களும் எமது Smart சாதனத்திலேயே சேமிக்கப்பட்டு விடும்.
அவற்றுடன் சேர்த்து பாடல்கள், திரைப்படங்கள் என அனைத்தையும் எமது Smart சாதனம் திக்குமுக்காடும் அளவுக்கு நிறைத்து விடுவோம் அல்லாவ?
இதனால் எமது Smart சாதனத்தில் போதிய இடமின்றி அவைகள் மந்த கதியில் இயங்க ஆரம்பிப்பதுடன் Battery இல் சேமிக்கப்பட்டிருக்கும் மின் சக்தி கூட மிக விரைவில் தீர்ந்து விடும்.
எனவே எமது Android சாதனத்தில் இருக்கக்கூடிய அத்தனை கோப்புக்களையும் ஒரே பார்வையில் பார்க்கவும், உங்கள் Android சாதனத்தில் அதிக இடத்தை பிடித்திருக்கும் கோப்புக்களை மிக இலகுவாக கண்டறிந்து நீக்கிக் கொள்ளவும் உதவுகின்றது Memory Map எனும் Android
சாதனத்துக்கான செயலி.
இந்த செயலி மூலம் உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நினைவகத்தின் அளவையும் எஞ்சி இருக்கும் நினைவகத்தின் அளவையும் வெவ்வேறாக அறிந்துகொள்ள முடிவதுடன் பயன்படுத்தப்பட்டுள்ள நினைவகத்தில் இருக்கும் சிறிய கோப்புக்களை சிறிய கட்டங்கள் மூலமாகவும் பெரிய கோப்புக்களை பெரிய கட்டங்களாலும் இது வேறுபிரித்துத் காண்பிக்கின்றது.
எனவே தேவையற்ற பெரிய கோப்புக்களை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடிவதனால் அவற்றினை நீக்கி நினைவகத்தில் பெருமளவிலான இடத்தினை மீதப்படுத்திக் கொள்ள முடியும்.
வெவ்வேறு வகையில் அமைந்த கோப்புக்களை வெவ்வேறுபட்ட வர்ணங்களில் இது காண்பிப்பதனால் குறிப்பிட்ட ஒரு வகையில் அமைந்த கோப்புக்களை தேடிப்பெருவதும் இலகு.
அதே போல் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Search bar மூலம் உங்களுக்குத் தேவையான எந்த ஒரு கோப்பினையும் ஒரு சில நொடிப் பொழுதுகளில் தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் பல வசதிகளை தரும் இதனை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விருன்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
Download Memory Map For Android

Post a Comment