தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

பிரபு;;புகைப்படங்கள், ஆவணங்களை PDF வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள உதவும் இணையதளம். (Word, Excel, PowerPoint, HTML,

உங்கள் கணினியில் உள்ள Word, Excel, PowerPoint, Image, HTML, மற்றும் Text போன்ற ஆவணங்களை PDF வடிவத்திற்கும் PDF ஆவணங்களை Word, computertipsandroidtips.blogspot.in TF போன்ற வடிவங்களுக்கும் இணையத்தின் ஊடாகவே மாற்றிக் கொள்ள உதவுகின்றது Sodapdf எனும் இணையதளம்.

இது போன்ற செயற்பாடுகளை கணினியின் ஊடாக மேற்கொள்வதற்கு உங்கள் கணினியில் மென்பொருள்இல்லாத சந்தர்பத்திலோ அல்லது இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு  இன்னும் ஒருவரின் கணினியை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலோ  இந்த இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவியாக அமையும்.




இந்த தளத்தின் முழுமையான வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு இலவச கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.


பின் இந்த இணையதளத்தின் பிரதான இடைமுகத்தில் File எனும் பகுதியின் ஊடாக நாம் Convert செய்ய இருக்கும் அனைத்து கோப்புக்களையும் தரவேற்றிக் கொள்ளவும் அவற்றை திறந்து பார்த்துக் கொள்ளவும், இன்னும் ஒருவருக்கு மின்னஞ்சல் செய்யவும் முடியும்.

அதேபோல் இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Create And Convert எனும் பகுதியின் மூலம் நீங்கள் தரவேற்றிய Word, Excel, PowerPoint, Image, HTML, மற்றும் Text போன்ற ஆவணங்களை PDF வடிவத்திற்கும் PDF ஆவணங்களை Word, RTF போன்ற வடிவங்களுக்கும் மாற்றிக் கொள்ள முடியும்.

அது மாத்திரம் இன்றி இந்த தளத்தின் Merge/Split எனும் பகுதியின் ஊடாக நீங்கள் இந்த தளத்திற்கு தரவேற்றிய PDF ஆவணங்களை ஒன்றிணைத்துக் கொள்ளவும், ஒன்றிணைக்கப்பட்ட PDF ஆவணங்களை வேறு பிரித்துக் கொள்ளவும் முடியும். (எனினும் இலவச கணக்கின் ஊடாக Merge/Split வசதியை பெற முடியாது)

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்குச் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget