தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

பிரபு::கட்டணம் செலுத்தி பெறவேண்டிய செயலிகளை இலவசமாக பெற உதவும் ஸ்மார்ட் சாதனத்துக்கான செயலி (Android/iOS)

பிரபு::


  • எமது தேவை எத்தகையதோ அதற்கு ஏற்றவாறான செயலிகளை இன்று நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் இருந்து தேடிப்பெற்றுக் கொள்ள முடிகின்றது.

  • அந்த வகையில் எமது Android ஸ்மார்ட் சாதனத்தை பேணுவதற்கும்,புகைப்படங்களை மெருகேற்றிக் கொள்வதற்கும்ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கும்உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும்அன்றாட  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் என ஏராளமான பல செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.


    அவ்வாறு நாம் எமது Android சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய செயலிகளை Play Store இல் இருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடிவதுடன் Play Store இல் இருந்து கட்டணம் செலுத்தி பெற வேண்டிய செயலிகளும் உள்ளது.

    நாம் இலவசமாக தரவிறக்கும் செயலிகளில் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வசதிகளே தரப்பட்டிருக்கும் அல்லது அவைகளை பயன்படுத்தும் போது விளம்பரங்கள் தோன்றக் கூடியதாக இருக்கும்.

    மாறாக நாம் Play Store இல் இருந்து கட்டணம் செலுத்தி பெரும் செயலிகள் மூலம் பூரண வசதிகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன் அவைகள் விளம்பரங்கள் நீக்கப்பட்டவைகளாக அமைந்திருக்கும்.

    எனவே நாம் பயன்படுத்தும் இலவச செயலிகளை விடவும் கட்டணம் செலுத்தி பெரும் செயலிகள் மூலம் சற்று சிறந்த அனுபவத்தை பெற முடிகின்றது.

    என்றாலும் நீங்கள் செயலிகளை ஏன் கட்டணம் செலுத்தி பெற வேண்டும், கட்டணம் செலுத்தி பெறவேண்டிய செயலிகளை அன்றாடம் நானே உங்களுக்கு இலவசமாக தருகின்றேனே என உங்களை அழைக்கின்றது AppGratis எனும் Android சாதனங்களுக்கான செயலி.


  • இந்த செயலியில் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு ஒரு தடவையும் ஒரு கட்டணம் செலுத்தி பெறவேண்டிய செயலி இலவசமாக வழங்கப்படுகின்றது. அவ்வாறு AppGratis செயலியில் பட்டியல் படுத்தப்படும் செயலியை சுட்டுவதன் மூலம் அதனை நேரடியாக Play Store இல் இருந்தே இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

    உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப் படும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget