தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

ரூ.3,999 விலையில் இன்ஃபோகஸ் எம்260 ஸ்மார்ட்போன்



இன்ஃபோகஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக குறைந்த விலையில் சில கைபேசிகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்த செவ்வாய்கிழமை இன்ஃபோகஸ் நிறுவனம் அதன் புதிய கைப்பேசியான இன்ஃபோகஸ் எம்260 ஸ்மார்ட்போனை ரூ.3,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைபேசி இ-காமர்ஸ் இணையதளமான ஸ்நாப்டீலில் இருந்து பிரத்தியேகமாக கிடைக்கும். 

டூயல் சிம் ஆதரவு கொண்ட இன்ஃபோகஸ் எம்260 ஸ்மார்ட்போனில் UI வைஃப் 2.0 ஸ்கின் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. இன்ஃபோகஸ் எம்260 ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.50 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6582M ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. இன்ஃபோகஸ் எம்260 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4, 3ஜி, ஜிஎஸ்எம், FM ரேடியோ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 155 கிராம் எடையுடையது மற்றும் அனைத்து வகைகளிலும் பிளாக் ஃபினிஸ் கொண்ட ஆரஞ்சு, எல்லோ மற்றும் ஒயிட் வண்ண வகைகளில் வருகிறது. 

 

இன்ஃபோகஸ் எம்260 ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:


டூயல் சிம்
டச் ஸ்கிரீன்
எடை (கி): 155
பேட்டரி திறன் (mAh): 2000
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: ஆரஞ்சு, எல்லோ, ஒயிட் 


டிஸ்ப்ளே

திரை அளவு: 4.50
 480x854 பிக்சல்கள்


ஹார்டுவேர்

ப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6582M
ரேம்: 1ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 8ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 32

பின்புற கேமரா: 5 மெகாபிக்சல்
முன் கேமரா: 2 மெகாபிக்சல்


ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
ஸ்கின்: UI லைஃப் 2.0


Wi-Fi b/g/n
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4
ஜிஎஸ்எம்
மைக்ரோ-யூஎஸ்பி
3ஜி
FM ரேடியோ

ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget