தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

ஆண்ட்ராய்டு கிட்கேட் ஸ்மார்ட் போன் வெறும் 650 இந்திய ரூபாய்களுக்கு வோல் மார்ட் தளத்தில் அறிமுகம்

ஆண்ட்ராய்டு கிட்கேட் ஸ்மார்ட் போன் வெறும் 650 இந்திய ரூபாய்களுக்கு வோல் மார்ட் தளத்தில் அறிமுகம்


2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அன்று அதன் விலை 599 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்தது. (39500 இந்திய ருபாய்)

எல்.ஜி ஸ்மார்ட் போன்


எல்.ஜி 16 ஸ்மார்ட் போன் 

ஆனால் தற்பொழுது கிட்டத்தட்ட அதே வசதிகளை தரக்கூடிய எல்.ஜி 16 எனும் ஸ்மார்ட் போன் வோல் மார்ட் தளத்தில் வெறும் 9.82 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இது ஏறத்தாள 650 இந்திய ரூபாய்கள் ஆகும்.



ஆண்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளம் 


3.8 அங்குல திரையை கொண்டுள்ள இதுஆண்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. எனினும் இது நிலையான இயங்குதளமாகவே இருக்கும் அதாவது இதனை ஆண்ட்ராய்டு லாலிபாப் பதிப்பிற்கோ அல்லது ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ பதிபிற்கோ மேம்படுத்த முடியாது.


மேலும் இது 1.2 GHz வேகத்தில் இயங்கக்கூடிய டுவல் கோர் ப்ராசசரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. 

அத்துடன் இது 3 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்த பிரதான கேமராவை கொண்டிருப்பதுடன் 3 ஜி  மற்றும் வை-பை போன்ற வலையமைப்புகளுக்கும் ஆதரவளிக்கிறது. இவற்றுடன் இது ப்ளூடூத் 4.0 வசதியையும் கொண்டுள்ளது.


மேலும் இது 4 GB நினைவகத்தை கொண்டுள்ளது. இதற்காக 4 GB microSD Card இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.தேவைப்படின் இதனை 32 GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.


எனினும் தற்போதைக்கு  வோல் மார்ட் தளத்தில் இதன் அத்தனை அலகுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன இருப்பினும் Get In Stock Alert என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் இது மீண்டும் விற்பனைக்கு வரும் போது மின்னஞ்சல் மூலம் அறிந்து கொள்ளலாம். அல்லது LG 15 ஸ்மார்ட் போனை அதே விலையில் கொள்வனவு செய்யலாம்.


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget