உங்கள் முகத்தை பளிச்சென்ற தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ள உதவும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்மார்ட் போன்களுக்கான அப்ளிகேஷன்
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைபயன்படுத்தி நாம் பிடிக்கும் எமது புகைப்படங்கலானது சில சந்தர்பங்களில் எமது முகத்தில் உள்ள தழும்புகளை வெளிப்படுத்தக் கூடியவைகளாகவும் தெளிவற்றதாகவும் அமைந்திருக்கும்.
சிலர்களின் பற்கள் மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும் இது குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் அவர்களின் சிரிப்பு அழகையே கெடுத்து விடுவதாக அமைந்துவிடும்.
நாம் பிடிக்கக்கூடிய புகைப்படங்களில் மேற்குறிப்பிட்டது போன்று இன்னும் பல குறைபாடுகள் இருக்கலாம்.
எனவே உங்கள் முகத்திலிருந்து வெளிப்படக்கூடிய அவ்வாறான குறைபாடுகளை மறைத்து உங்கள் முகத்திற்கு பளிச்சிடும் சிவப்பழகை பெற்றுக்கொள்ள உதவுகிறது Air Brush எனும் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான அப்ளிகேஷன்
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் முகத்திலிருந்து வெளிப்படக்கூடிய குறைபாடுகளை சொற்ப நேரத்திலேயே மறைத்துக்கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷனை திறக்கும் போது அதன் பிரதான இடைமுகத்தில் தோன்றக்கூடிய "Select Photo" என்பதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம்.
பின் குறிப்பிட்ட புகைப்படத்தை எடிட்டிங் செய்வதற்கான பகுதி தோன்றும்
இனி குறிப்பிட்ட பகுதியில் தரப்பட்டுள்ள "Smooth" எனும் டூலை (Tool) பயன்படுத்தி உங்கள் முகத்திலிருந்து வெளிப்படும் கரடு முரடான தோற்றத்தை மறைத்து மென்மையான தோற்றத்தை கொடுக்க முடியும்.
அதே போல் இதில் தரப்பட்டுள்ள Blemish எனும் டூலை பயன்படுத்தி கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தை தொடுவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்கிக் கொள்ள முடியும்.
இந்த அப்ளிக்கேஷனில் தரப்பட்டுள்ள Whiten எனும் டூலை பயன்படுத்தி மஞ்சள் நிற கரை படிந்துள்ள பற்களை தொட்டால் போதும், மாதக் கணக்கில் துலக்காத பற்களும் கூட மணிக்கொரு தடவை துலக்கும் பற்களை போல் மாறி விடுகிறது.
அத்துடன் "Brighten" எனும் டூலை பயன்படுத்துவதன் மூலம் மங்கள் நிறத்தில் இருக்கக்கூடிய கண்களை புகைப்படத்தில் தெளிவாக தோன்றும் வகையில் அமைத்துக் கொள்ளலா
மேலும் "Conclear" டூலை பயன்படுத்தி கண்களுக்குக் கீழ் தோன்றக்கூடிய கருவளையங்களை நீக்கிக் கொள்ளலாம்.
இவைகள் தவிர Resize, Reshape, Strech, Skin Tone, Blur, Canvas போன்ற இன்னும் பல டூல்களும் இதில் தரப்பட்டுள்ளன இவைகள் ஒவ்வொன்றும் உங்கள் முகத்துக்கு புதுப்பொழிவை கொடுக்க வல்லன.
இவைகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தனித்தனியான விளக்கங்கள் குறிப்பிட்ட செயலியிலேயே தரப்பட்டுள்ளது. எனவே எவ்வாறு பயன்படுத்துவது என்ற கவலை வேண்டாம்..!
இந்த அப்ளிகேஷனில் இறுதியாக தரப்பட்டுள்ள "Filter" எனும் பகுதியானது மிகவும் முக்கியமானது இதன் மூலம் புகைப்படத்தில் தோன்றும் உங்கள் முகத்திற்கு பளிச்சிடும் தோற்றத்தை கொடுக்க முடியும்.
எந்த ஒருவராலும் மிகவும் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலில் இருக்கக் கூடிய ஒவ்வொரு வசதிகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறையும் தரப்பட்டுள்ளது.
Post a Comment