ஆண்ட்ராய்டு Notification Panel இல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் வசதிகளையும் இணைத்துக் கொள்ள உதவும் செயலி
ண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் Notification பகுதியில் பல பயனுள்ள வசதிகளை இணைத்துக் கொள்ள உதவுகிறது TUFFS Notification எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையோ அல்லது அந்த செயலியில் உள்ள ஏதாவது ஒரு வசதியையோ TUFFS Notification எனும் இந்த செயலி மூலம் Nitification Panel க்கு இணைத்துக் கொள்ள முடியும்.
இந்த செயலியை திறந்தவுடன் தோன்றும் Home Button ஐ சுட்டுவதன் மூலம் Notification Panel இல் இணைக்க வேண்டிய அம்சங்களை தெரிவு செய்யவும் அது தொடர்பான ஏனைய மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும்.
மேற்குறிப்பிட்ட வகையில் பெறப்படும் Home என்பதில் Notification Panel இல் இணைக்கப்படும் பகுதியின் மாதிரி (Sample) தரப்பட்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள Add Newஎன்பதன் மூலம் Notification Panel இல் இணைக்க வேண்டிய செயலிகளையும் ஏனைய வசதிகளையும் தெரிவு செய்ய முடியும்.
மேலும் இதன் தோற்றத்தை Settings பகுதியில் உள்ள Themes எனும் பகுதியின் ஊடாக மாற்றியமைத்துக் கொள்ளவும் முடிகிறது.
அத்துடன் Notification Panel இல் இணைக்கப்படும் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையும் இணைக்க முடிவதோடு குறிப்பிட்ட ஒரு வரியில் இடம்பெற வேண்டிய செயலிகளின் அல்லது அவற்றுக்கான வசதிகளின் எண்ணிக்கையை 1 தொடக்கம் 8 வரையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.
இந்த செயலியின் அனுகூலங்கள்.
- விளம்பரங்கள் இல்லை.
- பயனர்களின் சிறந்த கருத்துக்களையும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 5 க்கு 4.5 எனும் நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
இதனை தரவிறக்கிக் கொள்ள பின்வரும் இணைப்பில் செல்க.
Post a Comment