பட்ஜெட் கருவிகளுக்கு பெயர் போன இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ஸ்வைப் டெக்னாலஜீஸ் நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன் ஒன்றை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வெளியிட்டுள்ளது.
அதன் படி ஸ்வைப் டெக்னாலஜீஸ் வெளியிட்டிருக்கும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.4,666க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பாருங்கள்..
விலை
ஸ்வைப் எலைட் 2 தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது.

லெனோவோ ஏ2010
முன்னதாக லெனோவோ நிறுவனத்தின் ஏ2010 மாடல் 4ஜி கொண்டிருந்ததோடு இந்தியாவில் ரூ. 4,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே
ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே க்யூஎச்டி ரெசல்யூஷனும் வழங்கப்பட்டுள்ளது.


பிராசஸர்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி
மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


கேமரா
கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோஃபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி
1900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்வைப் எலைட் 2 ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.


கனெக்டிவிட்டி
4ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வை-பை 802.11 b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி 2.0 மற்றும் ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனை
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் 2 ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment