உலகளவில் தகவல் பறிமாற்றத்தை எளிமையாக மாற்றியிருக்கும் பெருமை கொண்ட குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் செயலியை குறிப்பிடலாம். பல்வேறு பயனுள்ள சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலியை ஒரு போன் நம்பர் கொண்டு ஒரு கருவியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இங்கு ஒரே போன் நம்பர் கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்..
இங்கு ஒரே போன் நம்பர் கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்..

தேவை
ஒரே சிம் கார்டு கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த இரு கருவிகளிலும் சீரான இண்டர்நெட் கனெக்ஷன் அவசியமாகும்.

சிம் கார்டு
அடுத்து சிம் கார்டு இல்லாத கருவியில் வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் செல்ல வேண்டும்.

ப்ரவுஸர்
மொபைல் ப்ரவுஸரில் வாட்ஸ்ஆப் தளம் தான் ஓபன் ஆகும். இந்நேரத்தில் ப்ரவுஸர் ஆப்ஷனில் ரிக்வஸ்ட் டெஸ்க்டாப் சைட் (Request desktop site) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

க்யூஆர் கோடு
அடுத்து க்யூஆர் கோடு கொண்ட வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் ஓபன் ஆகும்.


மொபைல்
ஏற்கனவே வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மொபைலின் ஆப்ஷன்ஸ் -- செட்டிங்ஸ் -- வாட்ஸ்ஆப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


க்யூஆர் கோடு
மொபைலில் வாட்ஸ்ஆப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் மொபைலிலும் க்யூஆர் ஸ்கேனர் தெரியும்.

ஸ்கேன்
அடுத்து இரண்டாவது கருவியில் தெரியும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் இரண்டாவது கருவியில் வாட்ஸ்ஆப் வெப் ஓபன் ஆகும்.

வாட்ஸ்ஆப்
இதன்பின் இரண்டு கருவிகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.
Post a Comment