தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Full information for Simcard




உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

சிம் என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் தனிப்பட்ட வரிசை எண், பாதுகாப்பு அங்கீகார அம்சம், இடுதல் தகவல், உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.
தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.

சிப் பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget